உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!

கார்மெண்ட்ஸில் வேலை பார்த்து சாதாரண மனிதராக வாழ்ந்து வந்து அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகர் அஜித்குமார்.

நடிகர் விஜய்க்கு அடுத்து பெருவாரியான ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். அஜித் ஆரம்பத்தில் ஆசைப்பட்டு எல்லாம் சினிமாவிற்கு வரவில்லை ஒரு வாய்ப்பு கிடைக்கிறது நடிப்போம் என்றுதான் சினிமாவிற்கு வந்தார்.

பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கை ஆனது. எப்போதும் அஜித் குறித்து பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டு இருக்கும். அஜித் எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, இசை வெளியீட்டு விழாவிற்கோ வரமாட்டார். எந்த விருது வழங்கும் விழாவிற்கும் கூட அஜித் வர மாட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமே.

இந்த விஷயத்தால் விஜயகாந்திற்கும் அஜித்திற்கும் ஒரு சண்டை ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக விஜயகாந்த் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அப்போது அதில் ரஜினியும் கமலும் கூட கலந்து கொண்டனர்.

ஆனால் அன்று அஜித் மட்டும் கலந்து கொள்ள வரவே இல்லை அதனால் விஜயகாந்த் கோபம் அடைந்திருந்தார். இந்த நிலையில் ஒரு நிதி தொகையை எடுத்துக்கொண்டு அஜித், விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார் அப்போது கோபமான விஜயகாந்த் கமல் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்களே வந்து விட்டனர் உனக்கு என்ன வந்தது என கேட்டு திட்டி விட்டார்.

அப்பொழுதுதான் அஜித் தனக்கு முதுகில் ஆபரேஷன் செய்திருந்த விஷயத்தை விஜயகாந்த்திடம் கூறினார். அதைக் கேட்ட விஜயகாந்த் அழ துவங்கிவிட்டார். இவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கியா என்று கூறி அஜித்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் விஜயகாந்த்.