என் மேல எந்த தப்பும் இல்ல.. அதனால்தான் அந்த விஷயத்தை செஞ்சேன்.. நடிகை பாவனா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை பாவனா. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் பாவனா நடித்திருக்கிறார்.

அவர் நடித்த திரைப்படங்களில் தீபாவளி, ஜெயம் கொண்டான் மாதிரியான சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கின்றன. பாவனா சினிமாவில் அறிமுகமான உடனேயே அவருக்கென்று ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதற்கு பாவனாவின் தனிப்பட்ட அழகே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழுக்கு முன்பிருந்த மலையாளத்தில் பிரபலமான நடிகையாக பாவனா இருந்தார்.

பாவனா மலையாளத்திலும் பட வாய்ப்புகளை பெற்று வந்தார் இந்த நிலையில் தான் ஒரு முறை பாவனா மர்மமான முறையில் காரிலேயே கடத்தப்பட்டார். இதற்கு பிரபல மலையாள நடிகர்தான் காரணம் என கூறப்பட்டது.  இந்த நிகழ்வு நடந்த பிறகு இதை உடனடியாக பெரிய விஷயம் ஆக்கினார் பாவனா.

actress bhavana
actress bhavana
Social Media Bar

உடனடியாக இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் பாவனா பெரும்பாலும் நடிகைகள் அவர்களுக்கு நடக்கும் அவதூறுகளை வெளியில் கூறுவது கிடையாது.

ஆனால் பாவனாவை பொருத்தவரை அதை உடனடியாக வெளிப்படுத்தியதன் காரணமாக கேரள அரசும் இது குறித்து பெரும் நடவடிக்கை எடுத்தது. மேலும் நடிகர்களின் பாதுகாப்புக்காக நிறைய விஷயங்களை பிறகு கேரளா அரசு செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து பாவனாவிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது பதில் அளித்த பாவனா கூறும் பொழுது என் மீது எனக்கு எந்த தவறும் தெரியவில்லை.

அதனால் இதை உடனடியாக வெளியே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மேலும் காலம் தாழ்த்தி இந்த விஷயத்தை கூறினால் என் மீது தவறு இருப்பதாக ஆகிவிடும்.

ஏன் இவ்வளவு நாள் இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வரவில்லை என்று கூறி இருப்பார்கள் அதனால் தான் இதை உடனடியாக வெளியில் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார் பாவனா.