64 வயதில் காதல் திருமணம்? விஜய்யின் அம்மா நடிகை விளக்கம்!

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஜெயசுதா. 1973ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Jayasudha

தொடர்ந்து தமிழில் அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எனினும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த ஜெயசுதா தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு தாயாக நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு தாயாக நடித்துள்ளார்.

இவருக்கு நிதின் கபூர் என்பவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2017ல் நிதின் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து ஜெயசுதா சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

சமீபமாக அவர் படம் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒரு வெளிநாட்டவர் அவருடன் எப்போது வருவது சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் வரும் அந்த நபர் அமெரிக்க தொழிலதிபர் என்றும், இருவரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்த வதந்திகளை மறுத்துள்ள ஜெயசுதா, அவரது பெயர் ப்லிப் ரூல்ஸ் என்றும், அவர் அமெரிக்க தொழிலதிபர்தான். ஆனால் தன்னுடையை வாழ்க்கை வரலாற்றை அவர் உருவாக்கி வருவதால் தன்னுடன் தன்னை பற்றி தெரிந்து கொள்வதற்காக வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Refresh