Bigg Boss Tamil
அடுத்த டார்கெட் விஜய் டிவி.. பிக்பாஸில் களம் இறங்கும் எதிர்நீச்சல் நடிகை!..
மக்கள் மத்தியில் அதிக பிரபலமாவதற்கு பெரும்பாலும் பலரும் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் பிரபலங்களுக்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு கிடைப்பதை பலரும் பார்த்திருக்கிறோம்.
அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காரணத்தினால் மட்டுமே நிறைய வாய்ப்புகளை பெற்றவர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகைகள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஆர்வம் காட்ட துவங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் ஆர்வம்:
அதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்பொழுது வேறு எந்த சீரியலிலும் நடிக்க முடியாது சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் செல்ல முடியாது என்கிற நிலை இருக்கிறது.

அதனால்தான் சீரியல் நடிகைகள் அவ்வளவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலையில் எவ்வளவு வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை பிக் பாஸில் இந்த முறை கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவாக இருக்கிறார் நடிகை கனிகா.
நடிகை கனிகா திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்தார் இப்பொழுது சீரியல்களில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
கனிகாவின் திட்டம்:
இந்த நிலையில் தற்சமயம் எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து அடுத்து இவர் சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரியல்களில் வாய்ப்பை பெறுவதற்கு முன்பு முதலில் பிக்பாஸில் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் கனிகா.

அதனை தொடர்ந்து விஜய் டிவியுடன் கனகா பேசி உள்ளதாகவும் அவருக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக வழங்குவதாக விஜய் டிவி கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
