துணிவு படத்திற்காக வேண்டி கொண்டு சபரி மலை சென்ற அஜித் ரசிகர்கள்!

வரும் பொங்கலை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தின் நடிகர் அஜித் நடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. இதற்கு 8 வருடத்திற்கு முன்பு இதே போல பொங்கலுக்கு ஜில்லாவும், வீரம் திரைப்படமும் வெளியானது. ரெண்டுமே நன்றாக ஓடியது என்றாலும் அப்போதெல்லாம் அடிக்கடி விஜய் அஜித் படம் போட்டி போடும்.

இப்போது வெகு காலங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படமும் போட்டி போடுவது ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களும் கூட தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு சபரி மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். அஜித் ரசிகர்கள், அந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh