Connect with us

என் அடுத்த படத்திற்கு காத்திருக்கணும்.. அஜித் கொடுத்த அப்டேட்..!

Tamil Cinema News

என் அடுத்த படத்திற்கு காத்திருக்கணும்.. அஜித் கொடுத்த அப்டேட்..!

Social Media Bar

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்களும் திரைக்கு வருவதில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் இனி திரைப்படம் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.

எனவே அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் வராது. ஆனால் அஜித் நடிப்பில் படங்கள் அதிகமாக வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரும் கார் ரேஸ் மீது அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

முக்கியமாக கார் ரேசில் கலந்து கொள்ளும் சமயங்களில் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து இருக்கிறார் அஜித். இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அடுத்து ஒரு படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்சமயம் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்று விட்டார். அஜித்.

எனவே 2025 நவம்பரில்தான் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார் 2026 மே மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார் அஜித்.

Articles

parle g
madampatty rangaraj
To Top