Tamil Cinema News
முதல்நாளே அந்த படம் ஓடாதுன்னு தெரிஞ்சே நடிச்சேன்.. சந்தானத்திற்கு வந்த சங்கடம்..!
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவிற்கு பிறகு அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். நடிகர் சூரி யோகி பாபு போன்ற நடிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு காமெடி என்பதே பெரிதாக வராமல் போனது.
ஆனால் சந்தானத்தை பொருத்தவரை இப்பொழுதும் சந்தானம் காமெடி நடிகராக நடித்தால் அதை பார்ப்பதற்கு ஒரு மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற முடிவெடுத்து தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.
இந்த நிலையில் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் ராஜேஷிடம் கூறும் பொழுதே இந்த படம் ஓடாது என்று அவரிடம் கூறிவிட்டேன்.
ஏனெனில் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வரும் கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரம் தான் கதாநாயகனின் காதல் தோல்விக்கு காரணமாக அமையப்போகிறது. மேலும் ஒரு நகைக்கடை உரிமையாளரையும் காதலிக்க வைக்க செய்கிறது என்னும் பொழுது அவ்வை சண்முகி திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு மேக்கப் அந்த கதாபாத்திரத்திற்கு செய்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த மாதிரி எதுவும் படத்தில் செய்யவில்லை அதனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்த படம் அமையவில்லை. இந்த மாதிரி நிறைய திரைப்படங்களில் ஆரம்பிக்கும் போதே படம் ஓடாது என்று எனக்கு தெரிந்து விடும். ஆனாலும் நாங்கள் அந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சந்தானம்.
