Tamil Cinema News
நான் காப்பாத்துறேன் கவலைப்படாதீங்க..! சிறுத்தை சிவாக்கு கை கொடுத்த அஜித்..!
கங்குவா திரைப்படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. பெரும்பாலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெற்றியை கொடுத்து வந்துள்ளன.
ஆனால் கங்குவா திரைப்படம் மட்டும் தோல்வியை கண்டது. இதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அஜித்தை வைத்து இயக்கிய வீரம் விசுவாசம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன.
சிறுத்தை சிவா:
தொடர்ந்து அஜித்தும் சிறுத்தை சிவாவிற்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இனி சிறுத்தை சிவாவுக்கு பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ஆனால் நடிகர் அஜித் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருக்கிறார். இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது இது குறித்து அஜித் ரசிகர்கள் கூறும் பொழுது, பெரும்பாலும் அஜித் சினிமாவில் ஒருவர் கட்சியில் இருக்கும் போது தான் உதவி செய்வார் ஏற்கனவே பிரின்ஸ் திரைப்படத்தின் போது சிவகார்த்திகேயன் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.
அப்பொழுது அவருக்கு ஆறுதலாக பேசியிருந்தார் அஜித். அதே மாதிரி இப்பொழுது சிறுத்தை சிவாவுக்கும் கைகொடுக்கிறார் என்று கூறி வருகின்றனர்.