விக்னேஷ் சிவனுக்கு இப்ப வாய்ப்பு கிடையாது! – வண்டியை கிளப்பிய அஜித்!

அஜித் நடித்து அடுத்து வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Social Media Bar

நேற்றோடு துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்தது. இதையடுத்து அஜித் தனது முகத்தில் உள்ள தாடிகளை அகற்றி பழைய கெட்டபிற்கு வந்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவனுடன் ஒரு திரைப்படம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

அந்த பட வேலைகள் முடிந்த பிறகு 18 மாதங்கள் உலக சுற்றுலா ஒன்று போகலாம் என இருக்கிறார் அஜித். இதனால் அஜித்தின் படத்தின் திரைக்கதை வேலைகளில் ஈடுப்பட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

துணிவு படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து விக்னேஷ் சிவன் திரைப்படம் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக இப்போதே ஒரு 60 நாள் பயணம் கிளம்புகிறாராம் அஜித்.

ஒரு சின்ன பயணம் ஒன்று போய்விட்டு வந்துதான் இந்த படத்தின் வேலைகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.