ajith vijayakanth

ஊரே திரண்டு வந்தப்பையும் மாஸ் காட்டிய தல… விஜயகாந்துக்கு பிறகு அதை செஞ்சவர் அஜித் மட்டும்தான்!.

Actor Ajith: தமிழில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு எதிர்பாராத விதமாகதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் அமர்களம். ஏனெனில் அமர்களம் திரைப்படத்தின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டது.

அமர்களம் திரைப்படம் படப்பிடிப்பு நடந்தப்போது அதில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சரண் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும்போது விஜயகாந்திற்கு இணையாக அஜித் செய்த நிகழ்வு ஒன்றை கூறியிருந்தார்.

amarkalam

அதில் அவர் கூறும்போது ஒருமுறை அமர்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த ஊரில் திடீரென ஏதோ கலவரம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஊர் மக்கள் படப்பிடிப்பு தளத்திற்கும் பிரச்சனை செய்ய வந்தனர்.

ஊரே திரண்டு வருவதை பார்த்த அஜித் உடனே ஷாலினியையும் படக்குழுவினரையும் பாதுக்காப்பான இடத்தில் நிற்க வைத்துவிட்டு தனி ஆளாக அந்த கூட்டத்திடம் சென்று சமாதானம் பேசினார். இத்தனைக்கும் அந்த படம் வந்தப்போது அவர் பிரபல கதாநாயகனாக கூட ஆகியிருக்கவில்லை.

இருந்தாலும் துணிகரமாக அப்படியான விஷயத்தை செய்தார் அஜித். இதே போன்ற ஒரு நிகழ்வு விஜயகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்தது. அப்போது விஜயகாந்த் இதே போல தனி ஆளாக சென்று பிரச்சனையை தீர்த்து வைத்தார்.