Movie Reviews
துணிவு திரைப்படம் எப்படி இருக்கு ! – சுருக்கமான விமர்சனம்!
இந்த வருட துவக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படம் துணிவு மற்றும் வாரிசு ஆகும். தற்சமயம் இந்த இரண்டு படங்களும் வெளியாகிவிட்டன.
துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணிக்கே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
படத்தின் கதை:
சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 500 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை யாராவது திருடினால் கூட அதற்காக அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாது.

இந்த நிலையில் ஒரு கும்பல் அந்த பணத்தை திருடுவதற்காக திட்டம் தீட்டுகிறது. எனவே வங்கிக்குள் நுழைகிறது. அந்த குழுதான் அஜித்தின் குழு
தடாலடியாக உள்ளே புகும் அஜித் குழுவிற்கு பல ஆச்சரியங்கள் அந்த வங்கியில் காத்துக்கொண்டுள்ளன. ஒரு கட்டத்தில் அஜித் போலீசாரோடு பேசிக்கொண்டிருக்கும்போது வங்கியில் பாம் வெடிக்கிறது. அப்போதுதான் வங்கியில் இன்னொரு குழு இருப்பது தெரிகிறது. பிறகு அந்த குழுவிற்கும் அஜித்திற்கும் இடையே ஏற்படும் மோதல்களை வைத்து கதை செல்கிறது.
மங்காத்தா திரைப்படம் போலவே இந்த திரைப்படத்திலும் அஜித் ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரங்கள் அஜித்திற்கு நன்றாகவே செட் ஆக கூடியவை.
இந்த படத்திலும் கூட அது நன்றாகவே செட் ஆகி இருந்தது. மேலும் பட வங்கியில் நடக்கும் குளறுபடிகள். மக்கள் வங்கிகளிடம் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை எல்லாம் விரிவாக பேசும் படமாக உள்ளது. படத்தில் பலர் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அஜித் மட்டுமே முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார்.
படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் பார்ப்பதற்கு இது உகந்த படம் அல்ல.
சண்டை காட்சிகள் மற்றும் இசை எல்லாம் நன்றாக உள்ளது. மொத்தமாக இந்த பொங்கலுக்கு ஒரு நல்ல பேக்கஜாக துணிவு இருக்கும்.
