ரீ ரிலீஸ்லையும் போட்டியா!.. தல தளபதி பிரச்சனை என்னைக்கும் ஓயாது போல!..

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மறு வெளியீடாவது என்பது தொடர்ந்து நடந்து வரும் விஷயங்களாக இருக்கின்றன. சென்னையில் உள்ள சில திரையரங்குகள் இதை துவங்கி வைத்தன. அவை ஏற்கனவே வெளியான சில திரைப்படங்களை வெளியிட்டன.

அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்கள் மறு வெளியீடு ஆக துவங்கின. பையா, காக்க காக்க மாதிரியான பல படங்கள் மறு வெளியீடு ஆகின. இந்த மறு வெளியீட்டை பொறுத்தவரை இதில் இரண்டு நன்மைகள் உண்டு.

ஒன்று அந்த திரைப்படம் வெளியான காலக்கட்டத்தில் நல்ல படமாக இருந்தும் மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கும். அவற்றிற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க இந்த மறுவெளியீடு உதவும். மற்றொரு நன்மை என்பது ரசிகர்களுக்கு கிடைக்கும் தியேட்டர் அனுபவம்தான்.

ghilli
ghilli
Social Media Bar

ஏதாவது ஒரு பழைய படத்தை பார்க்கும்போது சினிமா ரசிகர்களுக்கு அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்குமே என தோன்றுவதுண்டு. இந்த நிலையில் அந்த திரையரங்குகள் திரையரங்கிற்கு வரும்போது அவர்களுக்கு அது நல்ல அனுபவத்தை அளிக்கிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் விஜய் படமான கில்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அதற்கு போட்டியாக அஜித் நடித்து பெரும் ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படத்தை அஜித் பிறந்தநாளான மே 1 அன்று வெளியிட இருக்கின்றனர்.

மறு வெளியீட்டில் கூட இருவருக்கும் இடையே போட்டி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.