குழந்தை பிறந்த பிறகும் அழகு குறையல –  ஆலியாவின் அசத்தலான புகைப்படங்கள்?

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆலியா பட். முதல் படத்தில் நடித்தபோது மிகவும் சிறிய பெண்ணாக இருந்தார்.

இதனால் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதில் பல பிரச்சனைகளை இவர் எதிர்க்கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார்.

இந்த நிலையில் உடுதா பஞ்சாப் என்கிற படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. பிறகு பத்ரி கி துல் ஹனியா, டியர் சிந்தகி போன்ற படங்களில் ஆலியா பட் நடித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வெகு நாட்களாக சென்ற இந்த காதல் இறுதியில் திருமணத்தில் முடிந்தது.

இதையடுத்து கர்ப்பமாக இருந்தார் ஆலியா பட். சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் கூட தனது உடல் அழகை சரியாக பேணி வரும் அலியா பட் இன்னமும் கூட அழகு குறையாமல் இருக்கிறார்.

தற்சமயம் அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அலியா பட்.

Refresh