Connect with us

போர் என்பது நமக்கு தேவைதானா? – விவாதத்தை ஏற்படுத்தும் ஹாலிவுட் திரைப்படம்.!

Hollywood Cinema news

போர் என்பது நமக்கு தேவைதானா? – விவாதத்தை ஏற்படுத்தும் ஹாலிவுட் திரைப்படம்.!

All Quiet on the Western Front

உலகில் போரின் கொடூரங்கள் என்பது கணக்கில் அடங்காதவை. மனிதர்களாகிய நாம் உருவாக்கிய மிக மோசமான கண்டுபிடிப்பு போர் எனலாம். போரை மையப்படுத்தி உலகில் பல திரைப்படங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் போரை சாகசமாக, வீரமாக காண்பிக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் சில திரைப்படங்கள் போர் எவ்வுளவு மோசமானது என்பதை காண்பிக்கும் விதத்தில் எடுக்கப்படுகின்றன.

 அந்த வகையில் ஜெர்மனியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் All Quiet on the Western Front என்னும் திரைப்படம் ஆகும். உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் பலத்த வரவேற்பினை பெற்று உலக அளவில் கவனிக்கத்தக்க திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைபடத்தின் கதை என்னவெனில், முதலாம் உலகப்போரில் பிரான்ஸ்க்கும், ஜெர்மனிக்கும் நடந்த சண்டையில் ஜெர்மனியின் சார்பாக போரில் எவ்வித ஆயுதப்பயிற்சியும் இல்லாத இளம் வயதினர் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

இப்போர்க்களம் அவர்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதும், போர் என்பது மனிதகுலத்தில் என்னவாக இருக்கிறது என்பதையும் அப்பட்டமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் 1925களில் முதலாம் உலகப்போரின் உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 1930லேயே இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் போருக்கு எதிராக மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போர்க்கள காட்சிகள் வழக்கமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படத்தில் போர்க்காட்சிகள் இரத்தக்களறியாக எடுக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தினை பார்ப்பவர்களால் போரின் குரூரத்தை நிச்சயமாக உணர முடியும்.

போர்க்களம் என்பது எப்போதும் தியாகத்தின் குறியீடாகவே நமக்கு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் போர்க்களம் எவ்வுளவு சுயநலமானது என்று பல காட்சிகள் விளக்கிக் கொண்டே இருக்கின்றன. ஒரு போர் நிகழும்போதும் அரசாங்கம் துவங்கி, சக வீரர்கள் வரை ஒவ்வொருவரும் சுயநலத்துடனே நடந்துக் கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனத்தை இயக்குனர் உணவு மூலமாக விளக்கியிருப்பது மிகவும் அசத்தலான ஒன்று எனலாம். போர்க்களத்தில் வீரர்கள் தங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழலில், போரை நிகழ்த்தும் அரசாங்க அதிகாரிகள் வித விதமான உணவுகளை ருசித்துக் கொண்டிருப்பதும், தங்களுடைய வளர்ப்பு நாய்க்கு உணவு கொடுத்துக் கொண்டிருப்பதும் என இருக்கிறார்கள்.

இதே சூழலில் போர்க்களத்திற்குள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் நிலையும், சக வீரர் தற்கொலை செய்துக் கிடக்கும்போது எவ்வித வலியும் இல்லாமல் அவரது உணவை எடுத்து இன்னொரு வீரர் சாப்பிடுவதும் என போர்க்களம் எப்பொழுதும் அறமற்ற சுயநலங்களின் சாட்சி என சொல்லலாம்.

இத்திரைப்படம் மேக்கிங் அடிப்படையிலும் மிக சிறப்பாக உள்ளது. போர்க்களத்தை கண்முன் நிறுத்தும் நோக்கோடு வைட் காட்சிகளை அதிகமாக வைத்திருக்கிறார்கள். குளோசப் காட்சிகள் வரும் ஒவ்வொரு தருணமும் நமக்கு வலி மிகுந்த காட்சிகள் கிடைத்துவிடுகின்றன.

முடிவாக போர் என்பது என்றும் அறமற்ற மோசமான ஒரு விஷயமே தவிர வேறு எதுவுமில்லை என்பதை மிகச்சிறப்பாக இத்திரைப்படம் நமக்கு சொல்லியுள்ளது. மனிதர்களாகிய நாம் இதைக் கேட்போமா?

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

எழுதியவர்:

Bala R Ganesh

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top