பாலிவுட்டில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சித்தாரே சமீபர் என்கிற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அமீர்கானின் கதை தேர்ந்தெடுப்புகள் என்பது மிக வித்தியாசமானதாக இருக்கும்.
அவர் நடித்த தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெண்கள் முன்னேற்றம் குறித்த கதைகளத்தை கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை தேர்ந்தெடுத்தது குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கூலி திரைப்படம் குறித்து என்னிடம் லோகேஷ் கனகராஜ் பேச வந்த பொழுது படத்தின் கதையை கூட நான் கேட்கவில்லை.
ரஜினி சாரின் படம் என்று கூறியதுமே நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வெகு வருடங்களுக்குப் பிறகு படத்தின் கதையை கூட கேட்காமல் ஒரு திரைப்படத்தை ஒப்புக்கொண்டேன் என்றால் அது கூலி திரைப்படம்தான்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு தினமும் படப்பிடிப்புக்கு காலை நான்கு மணிக்கே வந்து விடுவாராம் அமீர்கான். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது பொதுவாக படப்பிடிப்பதற்கு நான் ஒன்பது மணிக்கு தான் செல்வேன்.
ஆனால் எனது கையில் டாட்டூ குத்தப்பட்டு இருக்கும் அதனால் எனக்கு மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் எடுக்கும். மேலும் ரஜினி சார் எப்பொழுதும் டைமிங் இல் படபிடிப்பில் இருப்பார். எனவே அவருக்குப் பிறகு படப்பிடிப்புக்கு வருவது என்பது எனக்கு பெரிய ரிஸ்க்.
எனவேதான் நான் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நான்கு மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் அமீர்கான்.