எம்.ஜி.ஆர் படத்தின் தலையெழுத்தையே மாற்றிய அந்த ஒரு கட்டுரை!.. ஏ.வி.எம் செய்த வேலை!..
Actor MGR: நடிகர் எம்.ஜி.ஆர் எப்போதுமே புரட்சிக்கரமான திரைப்படங்களில்தான் நடிப்பார். இதனால்தான் அவர் புரட்சி தலைவர் என அழைக்கப்பட்டார். எப்போதுமே சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் திரைப்படங்களைதான் அவர் தேர்ந்தெடுப்பார்.
ஆனால் எம்.ஜி.ஆரே ஜாலியான படமாக தேர்ந்தெடுத்து பெரும் வெற்றியை திரைப்படம்தான் அன்பே வா. அன்பே வா திரைப்படத்தில் எந்த ஒரு புரட்சியையும் பேசியிருக்க மாட்டார் எம்.ஜி.ஆர். பெரும் பணக்காரரான அவர் வேலை தொல்லை தாங்க முடியாமல் காஷ்மீரில் இருக்கும் தனது வீட்டில் தங்கி ஊர் சுற்றி பார்க்க வருவார்.
அங்கு அவர் செய்யும் விஷயங்களே படமாக இருக்கும். ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே திரைப்படம்தான் அதுதான். அந்த படத்தை எடுத்தப்போதே இது கருத்து படமாக இல்லாமல் இருப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்கிற ஐயம் ஏ.வி மெய்யப்ப செட்டியாருக்கு இருந்தது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் காஷ்மீரில் அன்பே வா படப்பிடிப்பு நடப்பதை சுவாரஸ்யமாக எழுதி இமயத்தில் எம்.ஜி.ஆர் என்னும் கட்டுரையை எழுதினார். அந்த கட்டுரையை ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் ஆனந்த விகடன் அந்த கட்டுரையை பிரசுரிக்கவில்லை. இந்த நிலையில் அந்த கட்டுரையை படித்த ஏ.வி மெய்யப்ப செட்டியார் கண்டிப்பாக அந்த கட்டுரை படம் குறித்து மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் என நினைத்தார்.

எனவே எம்.ஜி.ஆர் கூறினால் ஆனந்த விகடனின் உரிமையாளர் எஸ்.எஸ் வாசன் கண்டிப்பாக அந்த கட்டுரையை போடுவார் என நினைத்தார் ஏ.வி.எம். எனவே ஆர்.எம் வீரப்பனை அழைத்த ஏ.வி.எம் இதுக்குறித்து எம்.ஜி.ஆரிடம் பேசுமாறு கூறினார்,
ஆனால் அதற்கு பதிலளித்த ஆர்.எம் வீரப்பன் நீங்கள் கூறினாலே எஸ்.எஸ் வாசன் கேட்பாரே பிறகு எதற்கு இந்த விஷயத்தை எம்.ஜி.ஆர் வரை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதை கேட்ட ஏ.வி.எம் உடனே எஸ்.எஸ் வாசனிடம் கேட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அந்த கட்டுரை வந்தது.
ஏ.வி.எம் எதிர்பார்த்தது போலவே அந்த கட்டுரை திரைப்படம் குறித்து பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த படம் வெளியானப்போது அந்த கட்டுரை எதிர்பார்த்த அளவு வேலையை செய்திருந்தது.