Actress
க்ளாமர் அள்ளுதே – கதாநாயகி ஆவதற்கான வேலையை பார்க்கிறார் அனிக்ஹா.!
தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிக்ஹா சுரேந்திரன்.

அதற்கு பிறகு ஏனைய தென்னிந்திய மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் தமிழில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

2019 ஆம் ஆண்டு இவர் நடித்த குயின் என்கிற வெப் சீரிஸ் இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. நடிகை ஜெயலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரிஸ் எடுக்கப்பட்டது.

18 வயதை அடைந்திருக்கும் அனிக்ஹா அடுத்தக்கட்டமாக படத்தில் கதாநாயகியாக நடிக்க திட்டமிடுகிறார். எனவே அதற்கு தகுந்தாற் போல கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்சமயம் நாகார்ஜூனா நடிக்கும் த கோஸ்ட் என்னும் திரைப்படத்திலும், ஹிந்தியில் ஓ மை டார்லிங் என்னும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அனிக்ஹா.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
