அந்த படத்துல நான் ஒழுங்கா நடிக்கல..! – பாராட்டுக்களை மறுத்த நாகேஷ்

நாகேஷ் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர். ஆரம்பக்கால தமிழ் சினிமாவில் இருந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நாகேஷ்.

சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்காகவே திரையில் ஓடிய திரைப்படங்களும் உண்டு. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் நாகேஷ்க்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதாவது எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என துடிக்கும் ஒரு கதாபாத்திரமாக நாகேஷ் இருப்பார். இதனால் பார்ப்பவர் அனைவரிடமும் கதை சொல்லுவார். இப்படியாக அவரது தந்தையாக நடித்திருக்கும் பாலய்யாவிடம் ஒரு கதையை சொல்வார்.

அது பேய் கதை என்பதால் பயந்து பாலய்யா பதறுவார். இந்த காட்சி காதலிக்க நேரமில்லை படத்தில் மிகவும் பிரபலமானது. இதனால் பல தரப்பினரும் நாகேஷை பாராட்டினர். அந்த காட்சியில் சிறப்பாக நடித்திருந்ததாக கூறினர்.

ஆனால் நாகேஷ் அந்த புகழை மறுத்துவிட்டார். இதுக்குறித்து நாகேஷ் கூறும்போது உண்மையில் அந்த காட்சியில் நடிகர் பாலய்யா தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவே அந்த காட்சியை பிரமாதமாக ஆக்கியது. எனவே அந்த காட்சி சிறப்பாக வந்ததற்கு பாலய்யாவே காரணம் என கூறியுள்ளார்.

Refresh