சவுதியில் தடை செய்யப்பட்ட அடுத்த ஹாலிவுட் படம் –  கார்ட்டூன் படத்துக்கு கூட தடையா?

ஹாலிவுட் திரைப்படங்கள் எப்போதும் உலகம் முழுவதும் வெளியாகும். ஏனெனில் ஹாலிவுட் சினிமா உலகம் முழுவதும் தங்களுக்கென பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஆனால் சவுதி மாதிரியான இஸ்லாமிய நாடுகள் தனிப்பட்ட தணிக்கை குழுவை வைத்துள்ளன. இவை திரைப்படங்களில் தங்கள் மதத்தை புண்படுத்தும் விதமாகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ ஏதேனும் விஷயங்கள் இருந்தால் அந்த திரைப்படங்களை தங்கள் நாடுகளில் தடை செய்கின்றன.

இஸ்லாமிய கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக அமெரிக்கர்களின் கலாச்சாரம் இருப்பதால் அவர்களின் படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஏற்கனவே ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் திரைப்படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக டம்பிள் டோரை காட்டிய காட்சியை நீக்கி படத்தை வெளியிட்டனர் இஸ்லாமியர். அதே போல டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படத்திலும் தன்பாலின ஈர்ப்பு காட்சி ஒன்று இடம் பெற்றதால் அந்த படத்தை தடை செய்தனர். இந்த நிலையில் தற்சமயம் டாய் ஸ்டோரி திரைப்படத்தின் பகுதியாக எடுக்கப்பட்ட பஸ் லைட் இயர் என்கிற படமானது சவுதியில் வெளியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திலும் தன்பாலின காதல் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மாதிரியான நாடுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழலாம் என சட்டம் இயற்றி வரும் நிலையில் இஸ்லாமிய மதத்தின் படி அது தவறானது என்பதால் இஸ்லாமிய நாடுகள் இதற்கு எதிராக இருக்கின்றனர். எனவே தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்கள் இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகின்றன.

Refresh