Connect with us

அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!

Cinema History

அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் இசையமைக்கும் பாடல்கள் யாவும் அதிகப்பட்சம் ஹிட் அடித்துவிடும். அவர் இசையமைத்த படங்கள் தோல்வி கண்டால் கூட அந்த பாடல்கள் ஹிட் அடித்துவிடுவதை நாம் பார்க்க முடியும்.

மிகவும் சிறு வயதிலேயே ஏ.ஆர் ரகுமான் திரைத்துறைக்கு வந்துவிட்டார். ரோஜா படத்திற்கு இசையமைக்கும்போது அவருக்கு வயது 17 என கூறப்படுகிறது. காதல் சார்ந்த பல பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவை பயங்கரமான ஹிட் கொடுத்துள்ளன.

ஒரு பேட்டியில் ஏ.ஆர் ரகுமானிடம் காதல் குறித்து நிறைய பாடல்கள் போட்டுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையில் காதலின் பங்கு என்ன? முக்கியமாக உங்கள் நண்பர்கள் யாராவது காதலித்து அவர்களுக்கு நீங்கள் உதவியது மாதிரியான சம்பவங்கள் நடந்ததுண்டா? என கேட்டனர்.

அப்போது ஏ.ஆர் ரகுமான் கூறும்போது “என் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை அப்படியான சம்பவம் நடந்துள்ளது. எனது நண்பரான ட்ரம்ஸ் சிவமணி ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்தார். அந்த பெண்ணை மயக்குவதற்காக என்னிடம் உதவி கேட்டார். நான் அதற்காக அவருக்கு ஒரு பாடலை போட்டு கொடுத்தேன்.”

வேறு எந்த நண்பர்களுக்கும் அப்படியான உதவியை செய்தது இல்லை என கூறுகிறார் ஏ.ஆர் ரகுமான்.

To Top