ரொம்ப பொறுமையா வேலை பாக்குறீங்க? – ரஹ்மான் மீது வைரமுத்து வைத்த குற்றச்சாட்டு!

சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் வந்த ஆரம்பக்காலம் முதலே வைரமுத்து அவருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக நட்பில் இருந்து வருகின்றனர்.

சினிமாவிற்கு வந்த சமயத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர் ரகுமானின் புகழ் இந்திய சினிமா முழுவதும் பரவியது.

ஆனால் அதற்கு பிறகு இசையமைத்த படங்களுக்கு எல்லாம் மிகவும் தாமதமாக இசையமைத்து கொடுத்தார் ஏ.ஆர் ரகுமான். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஒரு வாரத்திலேயே படத்திற்கான இசையை போட்டு தந்துவிடுவார்கள்.

ஆனால் ஏ.ஆர் ரகுமான் மட்டும் மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக்கொண்டு இசையமைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயங்களில் வைரமுத்து அவருக்கு நல்ல பழக்கத்தில் இருந்தார்!. இப்படி ஏ.ஆர் ரகுமான் தாமதமாக இசையமைப்பது குறித்து பல சர்ச்சைகள் வரவே இதுக்குறித்து ரகுமானிடம் பேசினார் வைரமுத்து.

அப்போது வைரமுத்து “ரகுமான் நீங்கள் மிகவும் தாமதமாக இசையமைத்து தருகிறீர்கள். அனைத்து படத்திற்கும் சற்று சீக்கிரம் இசையமைத்து தந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.

அதற்கு ஏ.ஆர் ரகுமான் கூறியதாவது, “சார் நான் ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரத்தில் கூட இசையமைத்து தந்துவிடுவேன். ஆனால் நான் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனவேதான் அதற்காக இவ்வளவு நாட்களை எடுத்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மணிரத்னமும் கூட சிறந்த இசை வேண்டும் என்பதால் நாட்கள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். அதனால்தான் இப்போதும் கூட அந்த பாடல்கள் அனைத்தும் ஒரு புதிய இசையாகவே நமக்கு தெரிகிறது.

Refresh