News
இப்பவும் நான் இளமையா இருக்குறதுக்கு காரணம் இதுதான்? –மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!
இந்திய சினிமா துறையில் மிகப்பெரும் இசையமைப்பாளர் என்றால் அது கண்டிப்பாக ஏ.ஆர் ரகுமான் தான். இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்துள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் கூட இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமானின் வயதை கணிப்பது என்பது பலருக்கும் கடினமான காரியம் என கூறலாம். அந்த அளவிற்கு இப்போதும் கூட பார்ப்பதற்கு இளமையாக தெரியக்கூடிய ஒரு ஆள் ஏ.ஆர் ரகுமான்.
ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர் ரகுமானிடம் இதுக்குறித்த கேள்வி கேட்கப்பட்டது “எப்போதும் மிடுக்கான அழகிய ஆடைகளை அணிந்து ஸ்மார்ட்டாக இருக்கிறீர்களே, அது எப்படி?” என கேட்கப்பட்டது.
அதற்கு விளக்கமளித்த ரகுமான், திருமணத்திற்கு பிறகு அவர் எங்கு வெளியே சென்றாலும் அவரது முக அலங்காரம் மற்றும் உடை அலங்காரத்தை அவரது மனைவிதான் செய்வார் என கூறினார்.
எனவேதான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் ஏ.ஆர் ரகுமான் இருக்கிறார் என கூறப்படுகிறது.
