மற்ற நடிகைகளை விட அந்த நடிகை எனக்கு ஸ்பெஷல்.. ஓப்பன் டாக் கொடுத்த அதர்வா..!

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு அடையாளம் கொண்ட ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அதர்வா.

முரளி மகனான அதர்வா ஆரம்பத்தில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது.

இந்த நிலையில் தற்சமயம் டி.என்.ஏ என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் சீக்கிரத்தில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இவருடன் சேர்ந்து நிம்மிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Social Media Bar

நிமிஷா சஜயன் ஒரு மலையாள கதாநாயகி ஆவார். ஆனால் அவரது நடிப்பின் காரணமாக தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியிருக்கிறது முக்கியமாக சித்தா திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைத்தது.

அதை மிகச் சிறப்பாக நடித்திருந்தார் நிமிஷா இந்த நிலையில் அதர்வா கூறும் பொழுது இதுவரை நான் நடித்த நடிகைகளில் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலானவர் நிமிஷா ஏனெனில் அவர் அதிகமாக பேச மாட்டார்.

ஆனால் படப்பிடிப்பு நேரங்களில் காட்சிகளை விவரிக்கும் பொழுது அது குறித்து நன்றாக கேட்டுக் கொள்வார். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் நிமிஷா படப்பிடிப்பு துவங்கியவுடன் அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார் என்று நிமிஷா குறித்து கூறியிருக்கிறார் அதர்வா.