காட்சிகள் லீக் ஆனதால் அவசரகதியில் வேலை பார்க்கும் அவதார் குழு.. அடுத்து வந்த அப்டேட்..!

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். அப்போதைய காலக்கட்டத்திலேயே அந்த திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அவதார் திரைப்படம். அதனை தொடர்ந்து அதனை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார்.

அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் வெளியானது. இந்த படமும் கூட உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று தந்தது. இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

Social Media Bar

இந்த நிலையில் சமீபத்தில் எப்படியோ அவதார் ஃபயர் அண்ட் ஆஸ் திரைப்படத்தின் ட்ரைலர் லீக் ஆனது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து உடனடியாக படத்தின் ட்ரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளது அவதார் படக்குழு.

வருகிற 25 ஆம் தேதி இந்த ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாள் எந்த அப்டேட்டும் தராத அவதார் குழு திடீரென இப்படி அப்டேட் விடுவதற்கு இப்படி காட்சிகள் லீக் ஆனதுதான் காரணம் என கூறப்படுகிறது.

 

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.