இட்டாச்சி உச்சிஹா கெட்டவனாக மாற காரணம் என்ன? பின்கதை!.

நருட்டோ அனிமே தொடரில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு க்ளானாக உச்சிஹா க்ளான் உள்ளது. ஷாரிங்கான் என்னும் தனிப்பட்ட கென் ஜிட்ஸு சக்தியை அவர்கள் கொண்டிருப்பதால் அவர்களுக்கு சக்திசாலிகளாக அறியப்படுகிறார்கள்.

ஆனால் உச்சிஹா க்ளானை சேர்ந்த இட்டாச்சி உச்சிஹா அந்த க்ளானிலேயே வலிமை மிக்கவனாக இருக்கிறான். இருந்தும் கூட ஒரு இரவில் மொத்த உச்சிஹா க்ளானையும் கொலை செய்கிறான் இட்டாச்சி. மேலும் தனது தாய் தந்தையரையும் கூட கொலை செய்கிறான்.

அதன் பிறகு உலகை அழிக்க ஒன்று கூடிய அகாட்சுகி என்னும் குழுவோடு பயணிக்கிறான் இட்டாச்சி. இதனால் அவனது சொந்த தம்பியான சாசுக்கேவே அண்ணனை கருவறுக்க காத்துக்கொண்டிருக்கிறான். இருந்தாலும் கூட எதற்காக நருட்டோ ரசிகர்கள் இட்டாச்சியை கொண்டாடுகிறார்கள் என்கிற கேள்வி புதிதாக நருட்டோ பார்ப்பவர்களுக்கு இருக்கும்.

Social Media Bar

ஒரு நாடு நன்றாக இருப்பதற்காக ஒரு கிராமம் அழிந்தால் தப்பில்லை என்பார்கள். அதுதான் இட்டாச்சியின் வாழ்க்கையிலும் நடந்த கதையாகும். இட்டாச்சி ஆன்பு ப்ளாக் ஆப்ஸ் என்னும் பாதுகாப்பு படையில் பணிப்புரிந்து கொண்டிருப்பான்.

ஆன்பு ப்ளாக் ஆப்ஸ் ஹிடன் லீஃப் வில்லேஜின் பாதுகாப்பு படையாகும். நைன் டைல் ஃபாக்ஸ் எனப்படும் ஒன்பது வால் நரி ஹிடன் லீஃப் வில்லேஜை தாக்கியப்போது அதை அங்கு கொண்டு வந்தது உச்சிஹா க்ளானின் தலைவனான மதரா உச்சிஹாதான் என்பது பலருக்கும் தெரிந்துவிடும்.

கடினமான முடிவுகளை எடுத்த இட்டாச்சி:

எனவே எப்படியிருந்தாலும் இவ்வளவு சக்தி வாய்ந்த உச்சிஹா க்ளான் பொதுமக்களுக்கு ஆபத்தாகதான் இருப்பார்கள் என அப்போது ஹிடன் லீஃபில் இருந்த பெரியவர்கள் முடிவெடுப்பார்கள். அதில் டன்சோவும் அடக்கம்.

இந்த நிலையில் உச்சிஹா க்ளானை சேர்ந்த சிலர் உள்நாட்டு போரை நடத்தி கோனாஹா அதாவது ஹிடன் லீஃப் வில்லேஜ்ஜின் தலைமையை காலி செய்ய திட்டமிடுவதை அறிகிறது ஆன்பு ப்ளாக் ஆப்ஸ். இந்த நிலையில் அப்படியொரு போர் நடந்தால் அது ஹிடன் லீஃபில் இரத்த ஆறை ஓட செய்யும் என அறிகிறார் இட்டாச்சி.

ஹிடன் லீஃப் மீது கொண்ட மதிப்பின் காரணமாக டன்சோவின் கட்டளைக்கு கீழ் தன்னுடைய சொந்த மக்களையே அழிப்பதற்கு முடிவெடுக்கிறார் இட்டாச்சி. இதன் மூலம் அடுத்து உள் நாட்டு போரின் மூலம் சாக இருக்கும் பெரும்பான்மையான உயிர்களை காப்பாற்ற முடியும் என நினைக்கிறார் இட்டாச்சி.

அதற்காக வெளி உலகத்தின் முன்பு கெட்டவனாக தன்னை முன்னிறுத்தி கொண்டு உச்சிஹா க்ளானையே அழிக்கிறார். தன்னுடைய தாய் தந்தையரையே கொலை செய்தபோதும் தனது தம்பி சாசுக்கேவை கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை.

அவன் வருங்காலத்தில் பலசாலியாக வரவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அவனிடம் விரோதத்தை வளர்த்து செல்லும் இட்டாச்சி இறுதியில் அவன் கைகளாலேயே இறக்கிறார். அதற்கு பிறகுதான் இட்டாச்சி ஹிடன் லீஃப் வில்லேஜின் அமைதிக்காக செய்த தியாகம் வெளிவருகிறது.

சோகமான கதையை கொண்டிருந்தாலும் கூட இந்த காரணங்களால் நருட்டோ ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாநாயகனாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.