கூலி படத்தால் நொந்து போன ஃபகத் பாசில்..! இதுதான் விஷயமா?

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. தளபதி திரைப்படத்தில் வரும் தேவா என்கிற பெயரிலேயே இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருவதாலேயே இதற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படம் என்கிற காரணத்தினால் எல்லாம் மொழிகளிலும் முக்கியமான பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

தெலுங்கில் இருந்து நடிகர் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். அதேபோல மலையாளத்திலிருந்து சோபின் சாகிர் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு இருந்து வந்தது.

Social Media Bar

இந்த நிலையில் சமீபத்தில் கூலி திரைப்படத்திலிருந்து மோனிகா என்கிற ஒரு பாடல் வெளியானது. அதில் சோபின் ஆடியிருந்த நடனம் அதிக பிரபலமானது கேரளா முழுவதும் தற்சமயம் இப்பொழுது அந்தப் பாடல் தான் பேச்சாக இருந்து வருகிறது.

சோபின் இதற்கு முன்பு இப்படி நடனம் ஆடியது கிடையாது. இந்த நிலையில் இதை பார்த்த பகத் பாஸில் கொஞ்சம் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தில் சோபின் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் முதலில் பகத் பாசில்தான் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அப்பொழுது மாரிசன் படத்தின் கதையை கேட்ட பகத் பாஸில் அந்த படத்திற்கு நடிக்க சென்று விட்டார் இல்லையென்றால் இப்பொழுது அவர் தான் அதிக பிரபலமாக இருந்திருப்பார்.