Connect with us

சகலகலா வல்லவன் படத்தை வச்சி நான் பயம் காட்டுனேன், எனக்கே அவர் பயம் காட்டுனார்.. பாக்கியராஜை பார்த்து பயந்த கமல்!..

bhagyaraj kamalhaasan

Cinema History

சகலகலா வல்லவன் படத்தை வச்சி நான் பயம் காட்டுனேன், எனக்கே அவர் பயம் காட்டுனார்.. பாக்கியராஜை பார்த்து பயந்த கமல்!..

cinepettai.com cinepettai.com

Kamalhaasan and Bhagyaraj : தமிழில் பல நடிகர்களுக்கு மத்தியில் போட்டிகள் என்பது நடந்திருக்கிறது. ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் ரஜினியும் கமலும் மட்டுமே மோதிக்கொள்ளவில்லை. அவர்களோடு நிறைய நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

அதில் சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ் என்று பல நடிகர்கள் உண்டு. அதில் கமலோடு முக்கியமாக போட்டி போட்ட ஒரு நடிகர் என்றால் அது பாக்கியராஜ். ஏனெனில் கமல் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படம் வெளியான போது அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எம்.ஜி.ஆர் நடித்து வெளியான பெரிய இடத்துப் பெண் என்கிற கதையின் தழுவலை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் சகலகலா வல்லவன் சகலகலா வல்லவன் வெளியாகி ஓரிரு மாதங்களில் பாக்கியராஜின் பொய் சாட்சி என்கிற திரைப்படம் வெளியாக இருந்தது.

இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதே பாக்கியராஜிற்கு பயமாக போய்விட்டது. இந்த நிலையில் வெளியான பொய் சாட்சி திரைப்படம் கமல்ஹாசன் திரைப்படம் அளவிற்கு பெரும் வரவேற்பை பெறவில்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் அதற்கு அடுத்த வருடம் முந்தானை முடிச்சு என்கிற சிறப்பான திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார் பாக்யராஜ். இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பு பெற்றது. அதற்கு அடுத்த மாதத்தில்தான் கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படம் வெளியாக இருந்தது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அப்போது பேசிய கமல்ஹாசன் கூறும் பொழுது ”சகலகலா வல்லவன் திரைப்படம் வந்தபோது பாக்யராஜ் என்னிடம் வந்து உங்கள் படம் வந்துவிட்டதால் என் படம் ஓடுமா என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் இப்பொழுது அவரது திரைப்படம் ஓடுவதை பார்க்கும் பொழுது என் படம் ஓடுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் கமல் அப்படி கமலுக்கு போட்டியான ஒரு நடிகராக அந்த காலத்தில் இருந்திருக்கிறார் பாக்யராஜ் .

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top