News
நான் உன் தங்கச்சியோட ஹோட்டல்ல.. பயில்வான் ரங்கநாதனிடம் இடி போல கேள்வியை இறக்கிய பிரபலம்..!
தமிழ் சினிமாவில் தற்சமயம் சர்ச்சையான பேச்சுக்களை பேசும் பிரபலங்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
முன்பெல்லாம் சமூக வலைதளங்கள் என்பது பெரிதாக கிடையாது என்பதால் யாரும் பெரிதாக சினிமா சார்ந்த விஷயங்களை கண்காணிக்க மாட்டார்கள்.
ஆனால் இப்பொழுது சினிமாவில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கண்காணித்து வெளியில் போய் கூறிவிடுகிறார்கள் இதனாலேயே நிறைய பிரச்சனைகள் வருகிறது. அப்படியாக பயில்வான் ரங்கநாதனும் அவர் சினிமாவில் இருந்த காலகட்டங்களில் நடந்த கிசுகிசுக்கள் தொடர்பாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கே.ராஜன் கூறிய பதில்
இந்த நிலையில் சினிமா நடிகர்களோடு நிறுத்தாமல் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் குறித்து அவர் பேசியிருந்தது அதிக சர்ச்சை ஏற்படுத்தியது. கே ராஜன் எப்பொழுதுமே ஏன் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறார்.
அதற்கு முதலில் பதிலை சொல்ல சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இது கே. ராஜனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து வீடியோ வெளியிட்ட கே.ராஜன் நான் லாட்ஜில் தங்கி இருந்தால் இவனுக்கு என்ன லாட்ஜில் இருந்து கிளம்பி வரச் சொல்கிறான் எச்ச பய. லாட்ஜில் தனியாக தானே தங்கி இருந்தேன் அவனுடைய தங்கச்சி கூடவா தங்கியிருந்தேன் என்று வெளிப்படையாக கேட்டுவிட்டார் கே ராஜன். இந்த நிலையில் அந்த வீடியோ தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.
