Connect with us

நீங்க நடிக்கிற படத்துல என்னால வேலை பார்க்க முடியாது!.. உதவி இயக்குனருக்காக கதாநாயகனை மாற்றிய பாக்கியராஜ்!..

bhagyaraj

Cinema History

நீங்க நடிக்கிற படத்துல என்னால வேலை பார்க்க முடியாது!.. உதவி இயக்குனருக்காக கதாநாயகனை மாற்றிய பாக்கியராஜ்!..

cinepettai.com cinepettai.com

Actor Bhagyaraj: தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். அவரது திரைப்படங்களில் வயது வந்தவர்களுக்கான காமெடிகள் இருந்தாலும் அவை எப்போதும் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததில்லை.

பாக்கியராஜ் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்தன. உதாரணமாக லோகேஷ் கனகராஜ் படத்திற்கு இப்போது இருக்கும் வரவேற்பை விடவும் அதிகமான வரவேற்பு அப்போது பாக்கியராஜிற்கு இருந்தது.

சாதரண குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரே எப்போதும் பாக்கியராஜ் திரைப்படத்தின் நாயகர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் தங்கச்சி செண்டிமெண்டை அடிப்படையாக கொண்டு பாக்கியராஜ் ஒரு கதையை எழுதினார். இந்த கதைக்கு நிச்சயமாக மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என அவர் நம்பினார்.

இந்த நிலையில் அப்போது உதவி இயக்குனராக இருந்த பன்னீர் செல்வத்தை அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். ஆனால் பன்னீர் செல்வம் அந்த திரைப்படத்தில் வேலை பார்க்க முடியாது என பாக்கியராஜிடம் நேரடியாகவே கூறிவிட்டார்.

என்ன காரணம் என கேட்டப்போது ஒரு இயக்குனராக எனக்கு உங்களை பிடிக்கும். ஆனால் ஒரு நடிகராக மேக்கப் செய்துவிட்டால் ரொம்ப கோபமாகிவிடுவீர்கள் எனவே நீங்கள் நடிக்கும் திரைப்படத்தில் என்னால் உதவி இயக்குனராக பணிப்புரிய முடியாது என கூறியுள்ளார்.

அதே சமயம் அந்த கதையில் நடிப்பது குறித்து பாக்கியராஜுக்கே கொஞ்சம் ஐயமாகதான் இருந்தது. எனவே அவர் அந்த படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தார்.

இப்போது அந்த படத்தில் நான் நடிக்கவில்லை எனவே நீ தாரளமாக உதவி இயக்குனராக பணிப்புரியலாம் என பன்னீர் செல்வத்தை அழைத்துள்ளார் பாக்கியராஜ். சொக்கதங்கம் என்கிற பெயரில் வெளியான அந்த திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது.

POPULAR POSTS

pugazh vengatesh bhatt
sundar c manivannan
rajinikanth vijayakanth
tms trajendar
gv prakash
gv prakash
To Top