Connect with us

போடா உன்ன பத்தி தெரியும்… பாக்கியராஜை அவமானப்படுத்தி பாரதிராஜா அனுப்புனதுக்கு இதுதான் காரணம்!..

bhagyaraj bharathiraja

Cinema History

போடா உன்ன பத்தி தெரியும்… பாக்கியராஜை அவமானப்படுத்தி பாரதிராஜா அனுப்புனதுக்கு இதுதான் காரணம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பொதுவாக வயது வந்தவர்களுக்காக இப்போது திரைப்படங்களில் வைக்கும் நகைச்சுவைகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் பாக்கியராஜ் திரைப்படங்களில் அப்படி இருக்காது. அதனால்தான் அந்த படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கிடைத்தது. இயக்குனராவதற்கு முன்பு பாக்கியராஜ் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார்.

பாரதிராஜா அவ்வளவாக திரைக்கதை எழுத வராது. எனவே பாக்கியராஜ்தான் அந்த படங்களுக்கு எல்லாம் திரைக்கதை எழுதுவார். இந்த நிலையில் வேறு சில திரைப்படங்களிலும் உதவி இயக்குனராவதற்கு பாக்கியராஜிற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் கன்னி பருவத்திலே என்கிற திரைப்படத்தில் பணிப்புரிவதற்கு பாக்கியராஜிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கன்னி பருவம் படத்தின் தயாரிப்பாளருக்கும் பாரதிராஜாவிற்கும் இடையே சச்சரவு இருந்து வந்தது.

அப்போது பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். அதில் பாக்கியராஜ் உதவி இயக்குனராக இருந்து வந்தார். படம் முடியும் தருவாயில் பாக்கியராஜை உதவி இயக்குனர் வேலையில் இருந்து நீக்கினார் பாரதிராஜா.

நீ அந்த தயாரிப்பாளரோட சேர்ந்து முதல் படம் பண்ணுவதற்கு தயாராகிட்ட. இனி உனக்கு இங்கு வேலையில்லை என கூறிவிட்டார். அதற்கு பதிலளித்த பாக்கியராஜ் நான் என்னுடைய முதல் படத்தை அந்த தயாரிப்பாளர் தயாரிப்பில் செய்ய மாட்டேன் என கூறி சென்றார். அதே போலவே தனது முதல் படத்தை வேறு தயாரிப்பாளர் மூலம் இயக்கினார் பாக்கியராஜ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top