இவ்வளவு கல் நெஞ்ச காரரா பிக் பாஸ் –  கண்ணீர் வடித்த அசிம்

பிக்பாஸ் 6 வது சீசன் தமிழில் துவங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தற்சமயம் வரை மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் 21 நபர்களில் ஒருவரை இந்த வாரம் ஒருவர் எலிமினேசன் செய்யப்பட உள்ளார்.

Social Media Bar

இந்த எலிமினேசன் செய்யப்பட உள்ள நபர்களுக்கு ஒரு சிறப்பு டாஸ்க்கை வழங்கியுள்ளார் பிக் பாஸ். அதன்படி இன்று எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருப்பவர்கள் கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவதற்குள் ஒரு கதையை கூற வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் கதையை கூறி முடிப்பவர்கள் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்து நீக்கப்படுவர்.

இதற்காக அசிம் கதை சொல்ல சென்றபோது தனது சொந்த கதையையே அவர் கதையாக கூறினார். தனது குழந்தை குறித்த முக்கியமான விஷயத்தை அவர் கூறி கொண்டுள்ள போது, உங்கள் நேரம் முடிந்துவிட்டது அசிம் என கூறி பிக் பாஸ் அவர் கதையை நிறுத்திவிட்டார்.

இதனால் வருத்தமுற்ற அசிம் அழ துவங்கிவிட்டார். பிக் பாஸ் இவ்வளவு கல் நெஞ்ச காரரா? என மக்கள் பேசி வருகின்றனர்.