பிற்போக்கா நடிச்சா ஓடும்.. ஆனா நடிக்க மாட்டேன்! – ஆயுஷ்மான் குரானா உறுதி!

பிரபல இந்தி நடிகரான ஆயுஷ்மான் குரானா எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்தியில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆயுஷ்மான் குரானா. நடிகராக மட்டுமல்லாமல் இசை, பாடகர், மாடல் என பல்துறை வித்தகராக இருக்கிறார். இந்தியில் ரொம்ப செலக்டிவ்வாக நடிக்க கூடியவர் ஆயுஷ்மான்.

இவர் இந்தியில் நடித்த விக்கி டோனர், ஆர்ட்டிக்கிள் 15, பதாய் ஹோ உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் தாராள பிரபு, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம் என ரீமேக் ஆகி ஹிட் அடித்துள்ளது.

தற்போது ஆயுஷ்மான் குரானா “டாக்டர் ஜி” என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தங்கை அனுபுதி காஷ்யப் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் சில நாட்கள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஆயுஷ்மான் குரானா “முற்போக்கான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவ்வாறான கதைகளையே நான் விரும்புகிறேன். பிற்போக்குதனங்களை நான் விரும்புவதில்லை. அப்படியான படங்கள் ஹிட் அடிக்கும் என்றாலும் அவற்றில் நான் நடிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.

Refresh