News
பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல இந்தி சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் வைஷாலி தக்கர். இவர் நடித்த சீரியல் தமிழில் ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் வெளியாகி தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையேயும் பிரபலமாக இருந்தார்.

வைஷாலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார். ஆனால் சில மாதங்கள் கழித்து அந்த திருமணம் நடக்காது என அவர் கூறியதுடன், அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் இந்தூரில் வசித்து வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் போலீஸார் ஒரு கடிதத்தை கண்டெடுத்துள்ளார்கள்.
அதில் அவர் தனக்கு தனது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், தான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த திடீர் முடிவு பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
