Bigg Boss Tamil
அந்த கருமாந்திரம் பிடிச்ச கூட்டத்துக்கிட்ட என்னால இருக்க முடியாது!.. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எகிறி குதித்த விச்சித்ரா!.
Vichitra in Bigg boss: பொதுவாகவே நம் மக்களுக்கு குழாயடி சண்டைகள் என்றால் மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். எனவே அதனையே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி.
சண்டை என்றால் நின்று பார்க்கும் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு சண்டையையே கான்செப்ட் ஆக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் ஹவுஸ், ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்று இரண்டு வீடுகளை வைத்து விட்டனர். இதில் பிக் பாஸ் கேப்டன் ஆறு நபர்களை வாரா வாரம் தேர்வு செய்து ஸ்மால் ஹவுஸிற்கு அனுப்பி விடுவார்கள்.
ஸ்மால் ஹவுஸில் உள்ளவர்கள்தான் சமையல் போன்ற வேலைகளை பார்த்துக்கொள்வார்கள். இப்படி வேலைகளும் இரண்டு வீட்டுக்குள்ளேயே இரு பக்கமாக பிரிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த வாரம் ஐந்து நபர்கள் புதிதாக வைல்ட்கார்டு ரவுண்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை டார்கெட் செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விட்டனர் சீனியர் போட்டியாளர்கள். அப்படி அனுப்பும் பொழுது அதோடு பழைய போட்டியாளராக இருந்த விச்சித்ராவையும் அனுப்பிவிட்டனர்.
ஆனால் அந்த ஐவருடன் இவருக்கு ஒத்து வரவே இல்லை. இதனால் கோபமாகி விதிகளை மீறி எகிறி குதித்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்து விட்டார் விச்சித்திரா. மேலும் அந்த மாதிரியான கருமாந்திரம் பிடித்த நபர்களை நான் பார்த்ததே கிடையாது என்று பலவாறு திட்ட துவங்கி விட்டார் விச்சித்ரா இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.