சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா.

விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற அர்ச்சனா முக்கிய போட்டியாளராக அங்கு மாறினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பொழுது அர்ச்சனாவால் அவ்வளவு சிறப்பாக போட்டியிட முடியவில்லை. ஆனால் அதுவே மக்கள் மத்தியில் அவர் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் அர்ச்சனா.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தார் அர்ச்சனா. இவருக்கு டிமான்டி காலனி பாகம் இரண்டில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

அதனை தொடர்ந்து இப்பொழுது அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி பாகம் 3 வேலைகளை ஈடுபட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அந்த படத்திற்கான பூஜையும் நடந்தது இந்த பூஜையில் அர்ச்சனாவும் கலந்து கொண்டார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் டிமான்டி காலனி திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ஹீரோயின் ஆகவா நடிக்கிறீர்கள் சைடு ரோலில் தானே நடிக்கிறீர்கள் என்று கிண்டல் செய்து பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அர்ச்சனா நிறைய தன்னம்பிக்கையுடன் தான் போராட வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு கல்லாக தாண்டி தான் முன்னேற முடியும் உங்களைப் போன்ற எதிர்ப்பவர்கள் எத்தனையோ பேரை சந்தித்துதான் மேலே வர வேண்டி இருக்கிறது என்று காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.