சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவை வம்பு செய்த லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக லாரன்ஸ் இருக்கிறார். இவர் பல்வேறு படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அதில் முக்கியமாக பேய் படங்களை குறிப்பிடலாம். முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த இவரது திரைப்படங்கள் என கூறலாம்.

சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் வாசு அவர்களே இந்த படத்தையும் இயக்குகிறார்.

ஆனால் ரஜினியிடம் கால் ஷீட் கிடைக்காத காரணத்தால் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் நடிகர் ராகவா லாரன்ஸை கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திலும் கூட வடிவேலு காமெடியனாக வருகிறார். 

வழக்கமாக லாரன்ஸ் படத்தில் அவருக்கு அம்மாவாக கோவை சரளா நடிப்பார் என்றாலும், இந்த படத்தில் லாரன்ஸ்க்கு அம்மாவாக நடிகை ராதிகா நடிப்பதாக கூறப்படுகிறது.

படடப்பிடிப்பு போட் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் படப்பிடிப்பு இடத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் லாரன்ஸ் மற்றும் ராதிகா இருவரும் வடிவேலுவின் கன்னத்தில் அடித்து விளையாடுகின்றனர்

வீடியோவை காண இந்த லிங்கை அழுத்தவும். https://twitter.com/VenkatRamanan_/status/1556917771296190464 

வடிவேலு வெகு காலத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பதால் படம் குறித்து மக்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

Refresh