ஏ.ஐயின் பயன்பாடு என்பது இப்போது அதிகரித்து வருகிறது. பல விஷயங்களுக்கு மக்கள் ஏ.ஐ ஐதான் நம்பி இருக்கின்றனர். மெயில் அனுப்புவதில் துவங்கி பல விஷயங்களுக்கு ஏ.ஐதான் உதவியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் சாட் சிபிடியின் உதவியோடு தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்து சாதனை செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணுக்கு நல்ல வருமானம்தான் வந்துள்ளது. ஆனால் மோசமான நிதி மேலாண்மை காரணமாக அதிகமான கடனுக்குள் சிக்கியுள்ளார் இந்த பெண். கடன் தொகை 19 லட்சத்தை அடையவே என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில்தான் இதுக்குறித்து சாட் ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரது வரவு செலவுகள் குறித்த முழு தகவலையும் பெற்ற சாட் ஜிபிடி வருகிற வருவாயை எப்படி சேமித்து கடனை அடைக்கலாம் என அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி அவர் நிறைய தேவையற்ற பொருட்களை வாங்கி வைத்திருக்கிறார் என்பதை அறிந்த சாட் ஜிபிடி அவற்றை ஆன்லைன் தளங்களில் விற்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. இப்படியாக அந்த பெண்ணுக்கு தேவையில்லாத செலவுகளை குறைக்க சாட் ஜிபிடி உதவியுள்ளது.
இதன் மூலமாக 10 லட்சத்தை சேர்த்த அந்த பெண் தன் கடனை அடைத்துள்ளார்.