Latest News
சுனைனா மீது ஆசைப்பட்ட நகுல்.. திடீர் குற்றச்சாட்டை வைத்த பிரபலம்!..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்து வந்தால் அவர்களுக்குள் காதல் இருக்கும் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
மேலும் முதல் படத்தில் ஒன்றாக நடித்து அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஜோடி மற்றொரு படத்தில் நடித்தால், ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதால் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிப்பார்கள்.
ஒரு சில நடிகர், நடிகைகள் இரண்டு மூன்று படங்கள் ஒன்றாக நடித்தால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் வரை செல்லும். தமிழ் சினிமாவில் இதுபோல பல ஜோடிகள் பல படங்களில் ஒன்றாக நடித்து அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் நடிகை நடிகர்களாக நகுல் மற்றும் சுனைனா தங்களின் முதல் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அதேபோன்று இரண்டாவதாக மற்றாெரு படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் வெற்றியை பதிவு செய்தார்கள்.
தற்போது உதவி இயக்குனர் ஒருவர் நடிகர் நகுல் மீது குற்றச்சாற்று ஒன்றை வைத்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் நகுல்
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் மற்றும் நடிகரான நகுல், பிரபல முன்னணி நடிகையாக இருந்த தேவயானியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் அந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். தற்போது பல இயக்குனர், தயாரிப்பாளர்கள் மீது அட்ஜஸ்மென்ட் பிரச்சனையை நடிகைகள் சுமத்தி வரும் நிலையில் தற்போது உதவி இயக்குனர் ஒருவரே நகுல் மீது இது போன்ற ஒரு விஷயத்தை குற்றம் சாட்டியிருக்கிறார்.
உதவி இயக்குனர் கூறிய அதிர்ச்சி தகவல்
நடிகை சுனைனாவும், நகுலும் இணைந்து இரண்டு படங்கள் ஒன்றாக நடித்திருந்தார்கள். இதில் காதலில் விழுந்தேன் மற்றும் மாசில்லாமணி இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும்.
மேலும் அதன் பிறகு இருவரும் ஒன்றாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தான் வாஸ்கோகாமா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்துரு என்பவர் நகுல் மீது நிறைய குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
படத்தில் தேர்வான நடிகையை நீக்கிவிட்டு சுனைனாவை நடிக்க வையுங்கள் என நகுல் கூறியதாகவும், நகுலுக்கு சுனைனா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஒரு சிலர் இந்த உதவி இயக்குனரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் நகுலுக்கும், சுனைனாவுக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். மேலும் இவர் நகுல் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.