செஃப் தாமுக்கு பூ கொடுத்த அவ்வை சண்முகி ! – வியந்து போன கோமாளிகள்

டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஷோவாக விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. வாரா வாரம் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்து மக்கள் அதை பார்க்கும் அளவிற்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது.


இதனால் மக்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க எபிசோட் வெளியாகும் முன்பே அதிலிருந்து சில காட்சிகளை விஜய் டிவி தனது யூ ட்யூப் சேனலில் வெளியிடுவதுண்டு.
அப்படியாக நேற்று அடுத்து வெளியாக இருக்கும் எபிசோடின் காட்சிகளை விஜய் டிவி வெளியிட்டது. இதில் வைல்ட் கார்டு மூலம் ஷோவுக்கு வந்த நடிகர் அரவிந்த் அவ்வை சண்முகி கெட்டப்பில் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.


பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளே பல கெட்டப்கள் போட்டு வருவார்கள். ஆனால் வித்தியாசமாக அரவிந்த் ஒரு குக்காக இருந்தாலும் வாரா வாரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஏற்கனவே இதற்கு முந்தைய வாரம் இவர் நாயகன் பட கமல் கெட்டப்பில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Refresh