Cinema History
தேவாவை வில்லனாக நடிக்க அழைத்த தனுஷ்!.. ஆனா தேவா ஒத்துக்கலை.. இதுதான் காரணமாம்!..
தமிழ் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைக்கும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இப்போதும் கூட கிராமங்களில் உள்ள டவுன் பஸ்களில் தேவாவின் பாடல்கள் அதிகமாக ஒலிக்கின்றன.
ஏனெனில் நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் தேவா. அதனால் மக்களுக்கு நெருக்கமான ஒரு இசையை அவரால் கொடுக்க முடிந்தது. இதனால் தொடர்ந்து தேவாவின் பாடல்களுக்கு வரவேற்பு இருந்தது.
கானா பாடல்களிலும் சரி மெலோடி பாடல்களிலும் சரி சிறப்பாக தனது இசையை கொடுத்து விடுவார் தேவா. இதனாலேயே அவரை தேனிசைத் தென்றல் தேவா என்று அழைத்து வந்தனர். தேவாவிற்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு பேட்டியில் அவர் இதுக்குறித்து கூறியிருந்தார். வடசென்னை படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பொழுது தேவாவிற்கு ஃபோன் செய்த தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆள் வேண்டும் என்று கூறி அதை தேவாவால் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று தேவா கேட்டதற்கு உங்களுக்கு வட சென்னையின் மொழி நன்றாக வரும் எனவே நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் கூறியுள்ளார். ஆனால் தேவாவிற்கு பொதுவாகவே நினைவுத்திறன் கொஞ்சம் குறைவு. ஆயிரம் முறை பாடிய பாடலை கூட திரும்ப பாட வேண்டும் என்றால் அதை எழுதி வைத்திருப்பதை பார்த்து தான் பாடுவாராம்.
இந்த நிலையில் வசனத்தை நான் நினைவு வைத்து பேசுவது கஷ்டம் எனவே என்னால் நடிக்க முடியாது என்று அதை நிராகரித்திருக்கிறார் தேவா. இதனையடுத்து ஒரு வேளை தேவா வட சென்னையில் அந்த படம் இன்னும் சிறப்பாக ஓடி இருக்குமோ என்கிற கேள்வி மக்கள் மத்தியில் உண்டாகியுள்ளது.