News
அனிமல் பட நடிகையுடன் ரொமான்ஸில் இறங்கிய தனுஷ்.. மறுபடியும் பாலிவுட்டிலா!..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த நிலையில் தற்சமயம் அவரே இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராயன். அந்த திரைப்படமும் வெகு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கிறது.
பாலிவுட்டில் தனுஷ்:
இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். நெகட்டிவ் க்ளைமேக்ஸை கொண்ட திரைப்படம் என்றாலும் அந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அனிமல் கதாநாயகி:
இந்த நிலையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக அதன் அடுத்த பாகம் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார்.

அனிமல் படத்தில் பிரபலமான நடிகை டிரிப்தி டிம்ரிதான் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் கவர்ச்சியில் உச்சக்கட்டம் காட்டும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.
