Hollywood Cinema news
அவதார் வருகையால் தள்ளி போகும் வாத்தி? – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

நேற்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை ஒத்தி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவதார் முதல் பாகமே இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் பல வாரங்கள் ஓடியது.
இதனால் வாத்தி டிசம்பர் 2ல் வெளியானால் இரண்டு வாரங்களிலேயே திரையரங்குகள் அவதார் வருகையால் குறையும் என்பதோடு, வசூலும் குறையும் என்று யோசிப்பதாக தெரிகிறது.
அடுத்து ஜனவரியில் துணிவு, வாரிசு படங்களும் வருவதால் வாத்தி படத்தை பிப்ரவரியில் வெளியிடலாமா என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
