Connect with us

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

dhanush karthik subbaraj

Cinema History

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

cinepettai.com cinepettai.com

தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் இயக்குனராவது என்பது முன்பெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேரடியாக இயக்குனராகி வந்தனர். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் போன்ற பெரும் இயக்குனர்களே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக படம் இயக்க உள்ளே வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு சினிமா மீது இருந்த ஆர்வமே அவர்களை மேலே கொண்டு சென்றது.

கார்த்திக் சுப்புராஜ் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அவரிடம் ஒரு முறை பேட்டியில் பேசும் பொழுது நீங்கள் நிறைய வெற்றி பணம் கொடுத்திருந்தாலும் ஜகமே தந்திரம் திரைப்படம் நீங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்ப்பை பெறவில்லை அதில் என்ன தவறு செய்தோம் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? என்று கார்த்திக் சுப்புராஜிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு சிறப்பான காட்சியாக இருந்தாலும் அதை திரையரங்குகளில் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய உயிரோட்டம் இருக்கும். அதை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் அப்பொழுது அந்த பாடத்திற்கான வரவேற்பும் அதிகரித்து விடும்.

ஆனால் நான் ஜகமே தந்திரம் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் தான் வெளியிட்டேன் அதை திரையரங்கில் வெளியிடாமல் விட்டதுதான் நான் செய்த தவறு ஏனெனில் ரசிகர்கள் கொண்டாட அதில் எக்கச்சக்கமான காட்சிகள் இருந்தன இருந்தும் அந்த படம் வரவேற்பை பெறாததற்கு காரணம் அதை நான் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டதுதான் என்று கூறி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

POPULAR POSTS

gv prakash
gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top