சாக்லேட்டும் இரும்பும் கலந்த வெறித்தனமான அப்டேட் –  தளபதி 67 படத்தின் பெயர் வெளியானது!

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகிவிடுகிறது.

Social Media Bar

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் இன்னும் பலர் நடிப்பது குறித்த அப்டேட்கள் வெளிவந்தன.

இதற்கெல்லாம் பெரும் அப்டேட்டாக இன்று மாலை தளபதி 67 படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ஸ் வெளி வருவதாக படக்குழு அறிவித்தது அதன்படி தற்சமயம் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் வருவது போலவே இந்த படத்தின் க்ளிம்ஸிலும் சமையல் கட்டில் விஜய் நிற்கிறார்.

ஆனால் சமையலுக்கு பதிலாக ஒரு பக்க சாக்லேட் செய்கிறார். மறுப்பக்கம் விரைப்பாக ஆயுதம் செய்து கொண்டிருக்கிறார். சாக்லேட் செய்யும்போது டீசண்டாக உடையணிந்துக்கொண்டும், இரும்பு செய்யும்போது பனியன் மட்டும் அணிந்துக்கொண்டும் இருக்கிறார்.

இறுதியாக எதிரிகளின் கார் வர இரும்பில் செய்த கத்தியை சாக்லேட்டில் போட்டு கத்தியின் சூட்டை தணிக்கிறார. எனவே இரு விதமான கதாபாத்திரமாக விஜய் இருக்கலாம். நிஜ உலகிற்கு அமைதியான இனிமையான கதாபாத்திரமாகவும், நிழல் உலகில் கொடுரமான கதாபாத்திரமாகவும் இருக்கலாம்.

அதை குறிக்கவே ஒரு பக்கம் இனிமையான சாக்லேட்டையும் இன்னொரு பக்கம் இரும்பையும் காட்டுகின்றனர் என யூகிக்கப்படுகிறது.

இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் ஈகிள் இஸ் கம்மிங் பாடல் வந்தது போல இந்த படத்திலும் ஒரு ஆங்கில பாடல் உள்ளது. லியோ லியோ என்னும் அந்த பாடலை க்ளிம்ஸில் கேட்க முடிகிறது.