அந்த காலத்துல ஒரு உலக சினிமால ஆரம்பிச்ச முடிச்சி இது!.. கொட்டுக்காளி குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறிய ஆச்சரிய தகவல்!..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக நடிக்கும் சிலர் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவார்கள். அந்த வகையில் பிரபல காமெடி நடிகனாக இருந்து தற்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூரி சமீபத்தில் விடுதலை பாகம் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறிய தகவல்கள் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு கருத்து தெரிவித்திருக்கிறார்.

கொட்டுக்காளி திரைப்படம்

kottukkaali
Social Media Bar

கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனரான பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தில் அன்னா பென் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறி இருக்கும் செய்தியை சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் கொட்டுக்காளி திரைப்படத்தை பற்றி கூறியது

கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் திரையிடப்பட்டு அங்கு அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அனைவரது பாராட்டையும் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Still-from-Kottukkaali-trailer

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் கொட்டுக்காளி திரைப்படத்தை பற்றி பாலாஜி சக்திவேல் கூறியதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது, பாலாஜி சக்திவேல் திரைப்படத்தைப் பற்றி கூறும் பொழுது, இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். பெரும்பாலும் நான் மேடைகளில் பேசுவது இல்லை. உண்மையாக நியாயமாக என் கருத்தை கூறுகிறேன். உலகத்திலேயேபைசிக்கிள் தீஃவ்ஸ் என்ற திரைப்படம் தான் உலக திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த திரைப்படம் என்ற பெயரை பெற்றது.

அந்த திரைப்படத்தை பார்த்த சத்யஜித் ராய் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பதேர் பாஞ்சாலி என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தின் தாக்கம் தான் தமிழில் வெளிவந்த 16 வயதினிலே போன்ற திரைப்படங்ளுக்கு முன்னோடியாக அமைந்தது.

இன்று பல இயக்குனர்கள் உருவாவதற்கு காரணம் அந்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தான். அப்படி ஒரு விஷயத்தை நான் கொட்டுக்காளி திரைப்படத்தில் பார்த்தேன் என பாலாஜி சக்திவேல் கூறியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.