Connect with us

எனக்கு போட்டியா எம்.எஸ்.வியும் ஏ.ஆர் ரகுமானும் இருந்தாங்க!.. முதல் படத்துலையே சிக்கலில் சிக்கிய இசையமைப்பாளர்!.

ar rahman bharathwaj

Cinema History

எனக்கு போட்டியா எம்.எஸ்.வியும் ஏ.ஆர் ரகுமானும் இருந்தாங்க!.. முதல் படத்துலையே சிக்கலில் சிக்கிய இசையமைப்பாளர்!.

Social Media Bar

Music Director bharathwaj: ஒவ்வொரு பிரபலத்திற்கும் சினிமாவில் முதல் பட வாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். அந்த வாய்ப்பில் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாவிட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

அந்த வகையில் தமிழில் முதல் பட வாய்ப்பு கிடைத்த பொழுது பெரும் பிரச்சனையில் சிக்கியவர்தான் இசையமைப்பாளர் பாரத்வாஜ். இதுக்குறித்து அவர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அதற்கு முன்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் இசையமைத்திருந்த பாரத்வாஜ்க்கு தமிழில் முதன் முதலில் காதல் மன்னன் திரைப்படத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது.

kathal-mannan
kathal-mannan

காதல் மன்னன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் சரனுக்கும் அதுதான் முதல் திரைப்படம். எனவே அவர் ஏ.ஆர் ரகுமானை வைத்து இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற முடிவெடுத்திருந்தார் ஏனெனில் அப்பொழுது ஏ.ஆர் ரகுமான் மிகவும் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வந்தார்.

சரணுக்கு வந்த பிரச்சனை:

 எனவே இயக்குனர் அறிமுக இயக்குனராக இருந்தாலும் ஏ ஆர் ரகுமானின் இசைக்காக இந்த திரைப்படத்தை பார்க்க வருவார்கள் என்பது இயக்குனர் சரணின் மனநிலையாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் கூறும் பொழுது எங்களுக்கு தெரிந்த இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் பாரத்வாஜ் அவர்தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்.

ஏ.ஆர் ரகுமானுக்கு கொடுக்கும் அளவிற்கு படத்திற்கு பட்ஜெட் இல்லை என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து பரத்வாஜை வைத்து இசையமைக்க சரணும் ஒப்புக்கொண்டார். இதற்கு நடுவே அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் எம்.எஸ் விஸ்வநாதன் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் நான்தான் இந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று கூறியிருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன். ஆனால் பரத்வாஜ்தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டனர் தயாரிப்பாளர்கள்.

இப்படி இரண்டு தடையை தாண்டி காதல் மன்னனுக்கு இசையமைத்தார் பரத்வாஜ். அதே போல அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்தது. பரத்வாஜ்க்கும் தமிழில் அதிக வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top