ஆட்டோ ட்ரைவரை ஹீரோவாக்கிய இயக்குனர் –  தமிழில் வரவேற்பை பெறும் திரைப்படம்..!

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் ப்ரொடக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாய்ப்பு தேடி வரும் பல இயக்குனர்களுக்கு அந்த நிறுவனம் வாயிலாக வாய்ப்பு வழங்கி வருகிறார் பா.ரஞ்சித்.

அந்த வகையில் அடுத்ததாக மேற்கு தொடர்ச்சி மலை என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் லெனின் பாரதிக்கு தனது தயாரிப்பு நிறுவனம் வாயிலாக ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளாராம். மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் தமிழ் சினிமாவில் வெகுவாக மக்களால் பேசப்பட்ட திரைப்படம். உலக திரைப்படத்திற்கு இணையான படமாக இது அமைந்தது என பலர் கூறியுள்ளனர்.

இந்த படத்தை விஜய் சேதுபதி தயாரித்திருந்தார். இந்நிலையில் லெனின் பாரதி அடுத்து இயக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் கிழக்கிந்திய கம்பெனி என கூறப்படுகிறது. இந்த படத்தைதான் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கிறார். இந்த படத்தின் நாயகனாக ஒரு ஆட்டோ ட்ரைவரை தேர்ந்தெடுத்துள்ளாராம் லெனின் பாரதி.

சாமானியர்களின் கதைகளை படமாக்குபவர் லெனின் பாரதி என்பதால் ஒரு சாமானியனையே கதை நாயகனாக வைத்துவிட்டார் போல என உலக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Refresh