ஐயா உங்க கதையை ஏற்கனவே ஒருத்தர் படமாக்கிட்டு இருக்கார்!.. பாக்கியாராஜிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!. தயாரிப்பாளரையே அதிரவைத்த பாக்கியராஜ்!.

Tamil Director Bhagyaraj: தமிழ் திரை உலகிற்கு சுவரில்லா சித்திரங்கள் என்னும் திரைப்படங்கள் மூலமாக் அறிமுகமானவர் இயக்குனர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் சில நாடகங்களை பார்த்துவிட்டு படம் எடுப்பது எளிது என கிராமத்தில் இருந்து வந்த பாக்கியராஜிற்கு மிக தாமதமாகதான் தெரிந்தது சினிமா வேறு, நாடகம் வேறு என்பது..

இந்த நிலையில் அப்போது 16 வயதினிலே திரைப்படத்தின் கதையை எழுதி வந்த பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். பாரதிராஜாவே ஒரு அறிமுக இயக்குனர்தான் என்பதால் பாக்கியராஜிற்கு மிக எளிதாக பட வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

ஆனால் பாரதிராஜாவிடம்தான் ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டார் பாக்கியராஜ். அதன் பிறகே அவர் தனியாக வந்து சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தை இயக்கினார். சோக க்ளைமேக்ஸ் திரைப்படங்களை விடவும் ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததால் அப்படியாக கதைகளையே பாக்கியராஜ் பிறகு படமாக்கினார்.

அதில் முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, தாவணி கனவுகள் போன்ற படங்கள் முக்கியமானவை, இந்த நிலையில் பாக்கியராஜ் படமாக்குவதற்காக ஒரு புது வித கதையை எழுதி வைத்திருந்தார். அதை படமாக்குவதற்கு தயாரிப்பாளரையும் பிடித்து விட்டார். அப்போது அவரது உதவி இயக்குனர் ஏற்கனவே கிட்டத்தட்ட அதே போன்ற கதையை ஒருவர் ஏற்கனவே படமாக்கியுள்ளார்.

bhagyaraj
bhagyaraj

ஆனால் சில பிரச்சனைகளால் அந்த படம் முழுமை பெறாமல் இருக்கிறது என கூறினார். இதை கேட்ட பாக்கியராஜ் இந்த படத்தை கை விட்டு விடலாம் என கூறினார். ஆனால் அதை கேட்டதும் தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி விட்டார். ஏனெனில் பாக்கியராஜ் சொன்ன கதை தயாரிப்பாளருக்கு பிடித்திருந்தது.

அந்த படம் வெளிவர வாய்ப்பு இல்லை. அதனால் அந்த கதையை எடுப்பதில் பிரச்சனை இல்லை என கூறியுள்ளார் தயாரிப்பாளர். ஆனால் அதற்கு பாக்கியராஜ் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அந்த படம் திரும்ப எடுக்க முடிவெடுக்கப்பட்டால் நமது படம் அதற்கு இடையூறாக இருக்கும் என கூறி அந்த கதையை கைவிட்டார் பாக்கியராஜ்.