அந்த மாதிரி சொல்றவனை நம்பாதீங்க..! அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி இயக்குனர் 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட அதன் மூலமாக அதிக பிரபலமான ஒரு இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பிரேம்.

பெரும்பாலும் இயக்குனர் பிரேம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களாக இருக்கும். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வுரீதியாக நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரேமின் திரைப்படங்கள் இருக்கும்.

இந்த நிலையில் பெரும்பாலும் சினிமாவை பார்க்கும் பொழுது அதை அரசியல் சார்ந்து பார்க்க கூடாது என்று கூறுகிற மக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிரேம் சொன்ன விஷயம்:

அவர்களை விமர்சித்து சமீபத்தில் பேசியிருந்தார் பிரேம். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்று கூறுபவர்களை எப்போதும் நம்பாதீர்கள். அவர்களால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது ஏனெனில் சிறு வயதில் இருந்தே நான் சினிமா பார்த்து வருகிறேன்.

Social Media Bar

சின்ன வயதில் எனது அப்பா அம்மா எனக்கு கற்றுக் கொடுத்ததை விட சினிமா கற்றுக் கொடுத்ததுதான் அதிகம். உண்மையில் எனது அப்பா அம்மா கற்றுக் கொடுக்காத விஷயங்களை கூட சினிமா எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது.

எனவே சினிமா என்பது வெறும் திரைப்படம் மட்டும் கிடையாது அரசியல் சார்ந்து திரைப்படம் எடுக்கும் எவ்வளவோ இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நினைத்தால் நல்ல வசூல் கொடுக்கின்ற சாதாரண கதை களங்களை தேர்ந்தெடுத்து படமாக்க முடியும்.

அதன் மூலம் அவர்களுக்கு பெரிய பெரிய வாய்ப்புகளும் வரும். இருந்தாலும் கூட அவர்கள் ஏன் அரசியல் சார்ந்து எடுக்கிறார்கள் என்றால் அதன் மீது அவர்களுக்கு இருக்கும் விருப்பம் தான் என்று கூறி இருக்கிறார் பிரேம்.