அந்நியனாக விராட் கோலி நடிச்சா நல்லா இருக்கும்!.. தனது ஆசையை கூறிய இயக்குனர் ஷங்கர்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு. ஏனெனில் அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

ஆனால் 2018 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்திற்கு பிறகு எந்த ஷங்கர் திரைப்படமும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

director shankar
director shankar
Social Media Bar

அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் திரைப்பட ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளுக்கு சென்று வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் உங்கள் படத்தில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்க வேண்டும் என்றால் யாரை நடிக்க வைப்பீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைப்பேன். அந்நியன் படத்தின் விராட் கோலியை நடிக்க வைப்பேன். ஏனெனில் அவர் கொஞ்சம் அக்ரிசிவான ப்ளேயர். அந்நியன்னு சொன்னாலே அவர் நியாபகம்தான் வருது என கூறினார் சங்கர்.

அதே போல ஜெண்டில்மேன் திரைப்படத்தில் ராகுல் த்ராவிட்டை நடிக்க வைப்பேன் என கூறியுள்ளார் ஷங்கர்.